தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்: நவ., 15க்குள் சேர்க்கையை முடிக்க உத்தரவு

மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்: நவ., 15க்குள் சேர்க்கையை முடிக்க உத்தரவு

மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்: நவ., 15க்குள் சேர்க்கையை முடிக்க உத்தரவு


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 02, 2023 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 02, 2023 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி மருத்துவப் படிப்புகளில் காலி இடங்களுக்கான கலந்தாய்வை நடத்தி, நவ. 15ம் தேதிக்குள் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை முடிக்க தேசிய மருத்துவ ஆணையம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.நாடு முழுதும் மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருந்தது. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.காலதாமதமாக நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தேசிய மருத்தவ ஆணையம், காலதாமதம் குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் தரும்படி புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதியான விண்ணப்பதாரர்களின் இடங்கள் வீணாவதை தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதில் காலியிடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த ஆணை பெற்றது.அதன்படி, புதிதாக கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர், வரும் நவம்பர் 5ம் தேதி வரை பதிவு செய்து பணம் செலுத்தலாம். இடங்களை நவம்பர் 1 முதல் நவம்பர் 5 வரை தேர்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீடு நவம்பர் 6 முதல் 7 வரை நடத்தப்படும். அன்றே சீட் ஒதுக்கீடு விபரம் வெளியிடப்படும்.சீட் பெற்ற மாணவர்கள், வரும் 8ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டிலோ, மாநில ஒதுக்கீட்டிலோ இதுவரை இடம் கிடைக்காதோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டபோது, புதுச்சேரியில் காலதாமதமான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது. இதனால் காலதாமதமாக சேர்ந்த மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. நவம்பர் 15 ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடத்த தேசிய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us