UPDATED : நவ 04, 2023 12:00 AM
ADDED : நவ 04, 2023 07:48 PM
அ நிறம் | அளவு
மணிப்பூரில், கோடை விடுமுறைக்காக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த மே மாதம் நடந்த வன்முறை, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் திறக்கப்படாமல் இருந்தது. ஜூலை முதல் படிப்படையாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும், நிவாரண முகாம் மற்றும் மத்திய ஆயுதப்படைகளின் பணியாளர்களை தங்கவைப்பதற்காக பயன்படுத்தப்படும் நிலையில், 26 பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. 347 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 ஆயிரத்து 915 மாணவர்களில், 15 ஆயிரத்து 641 பேர் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த வார நிலவரப்படி, 77 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர். இத்தகவல்களை மணிப்பூர் கல்வி அமைச்சர் தௌனோஜம் பசந்தகுமார் சிங் வெளியிட்டுள்ளார்.
