தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்பு


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி தினமலர்-பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.புதுச்சேரி தினமலர்-பட்டம் இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி, கொரவள்ளிமேடு சுப்ரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்க 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது.பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். போட்டியின் இறுதியில் 9ம் வகுப்பு மாணவர்கள் தேவ் ஆனந்த், வைஷ்ணவி அணி முதலிடம், பிளஸ் 1 மாணவியர் சுஜி, அட்சயா அணி இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் தி சுசான்லி குழுமம் மற்றும் வி ஹெர்பல் நிறுவன இன்ஜினியர் கவுதம், டாக்டர் பானுபிரியா ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us