தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு
தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க முதல்வர் சித்தராமையா உத்தரவு
UPDATED : நவ 06, 2023 12:00 AM
ADDED : நவ 06, 2023 04:44 PM
மைசூரு:
வாரியங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடந்த தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க, கர்நாடக அரசு தேர்வு ஆணையத்துக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.மைசூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
வறட்சி நிவாரண தொகை விடுவிக்கும்படி, மத்திய அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை 1 பைசா கூட வழங்கவில்லை. வளர்ச்சி பணிகளுக்கு நிதி கேட்க, கர்நாடக அமைச்சர்கள், டில்லிக்கு சென்றால், மத்திய அமைச்சர்கள் தங்களை சந்திக்க, நேரம் ஒதுக்கி கொடுப்பது இல்லை. கர்நாடகாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை, மத்தியில் இருப்பவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. வறட்சி பாதித்த பகுதிகள் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, பா.ஜ., தலைவர்கள் டில்லிக்கு செல்ல வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நிதி ஒதுக்கும்படி வலியுறுத்த வேண்டும். காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதிகளும், பா.ஜ.,வினர் கண்களை உறுத்துகிறது. அந்த திட்டங்கள் ஏதாவது குறை கண்டுபிடிக்க பார்க்கின்றனர். அவர்கள் என்ன சொன்னாலும், வாக்குறுதி திட்டங்களை நிறுத்த மாட்டோம்.அமைச்சர்களுடன் நான் நடத்திய கூட்டத்தில், முதல்வர் பதவி குறித்து பேச வேண்டாம் என்று, உத்தரவிட்டு உள்ளேன். சிவகுமார் முதல்வர் ஆனால், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரும் ஆதரவு தருவர் என்று, குமாரசாமி கூறி இருப்பதை கேட்டால், எனக்கு சிரிப்பாக வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான, நீதிபதி காந்தராஜ் அறிக்கை இன்னும், என் கைக்கு வரவில்லை.அதற்குள் பா.ஜ.,வினர் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தேய்ந்து போன நாணயம். அதனால் தான் அவருக்கு பா.ஜ., சீட் கொடுக்கவில்லை. அவரது வார்த்தைகள் விலைமதிப்பற்றவை.வாரியங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் தேர்வில், கலபுரகி, யாத்கிரில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும்படி, கர்நாடகா தேர்வு ஆணையத்திற்கு உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
