தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வித்துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வி, தொழில் நிறுவனங்களின் மாநாடு

உயர்கல்வித்துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வி, தொழில் நிறுவனங்களின் மாநாடு

உயர்கல்வித்துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வி, தொழில் நிறுவனங்களின் மாநாடு


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இந்திய தொழில் கூட்டமைப்பு ( சி.ஐ.ஐ., ) சார்பில், உயர்கல்விக்கான மாற்றத்தில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மற்றும் கல்வி தொழில்நுட்பங்களில் பங்களிப்பு குறித்த உயர்கல்வி மாநாடு கோவை நீலம்பூர், லீ மெரிடியன் ஹோட்டலில் நடந்தது.இதில், என்.எஸ்.இ., அகாடமி சி.இ.ஓ., அபிலாஷ் மிஸ்ரா பேசியதாவது:
ஏ.ஐ., தொழில்நுட்பம் காரணமாக அனைத்து துறைகளிலும் அபரிவிதமான வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. மாற்றங்கள் எப்போதும் சவால்களுடன் தான் வரும் என்பதால், அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். 2000க்கு முன் பிறந்தவர்களுக்கு தொழில்நுட்பம் என்னென்ன செய்ய முடியும் என்பதை உணரமுடியும். அதன் பின் பிறந்தவர்கள் தொழில்நுட்பத்துடனே பிறந்து, வளர்கின்றனர்.தனிப்பட்ட ஒருங்கிணைந்த செயல்வழிகற்றல் முறை அவசியமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்கல்வித்துறை பல்வேறு புதிய கோணங்களுக்கு மாறியுள்ளது. எங்கெல்லாம் இணையதளம் உள்ளதோ; அங்கு வகுப்பறை என்பது இருக்கும்.நாம் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதே மிகவும் முக்கியமானதாக உள்ளது. தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் உள்ளது; கற்றலுக்கும் தொழில்நுட்பத்திற்குமான இடைவெளியை குறைக்கவேண்டியதே அவசியம்.கற்றல் என்பது எப்போதும் தொடரும் ஒன்று, பட்டம் பெற்று வேலை கிடைத்தவுடன் பலர் கற்றலை நிறுத்திக்கொள்கின்றனர். யாராக இருப்பினும் கற்றல் என்பது இறுதி வரை தொடரவேண்டும். தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, மாற்றங்களுக்கு ஏற்ப உடனுக்குடன் கல்விநிறுவனங்கள் அதை ஏற்று நடைமுறைப்படுத்தவேண்டும்.இவ்வாறு, பேசினார்.தொடர்ந்து, உலகளவில் உயர்கல்வியில் ஏ.ஐ., தொழில்நுட்ப சார்ந்த கண்ணோட்டம், உயர்கல்வி செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியில் மாற்றியமைத்தல், ஏ.ஐ., சார்ந்த பாடத்திட்ட மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.துவக்கவிழாவில், கோல்ரீட் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் ஹரி சுப்ரமணியன், சி.ஐ.ஐ., கோவை பிரிவு தலைவர் செந்தில் கணேஷ், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கல்விநிறுவனங்களில் பிரதிநிதிகள், தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us