தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வில் முறைகேடு புகார்: விசாரணை கோரிய மனு பைசல்

தேர்வில் முறைகேடு புகார்: விசாரணை கோரிய மனு பைசல்

தேர்வில் முறைகேடு புகார்: விசாரணை கோரிய மனு பைசல்


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 07:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பணியாளர் தேர்வாணையம், போக்குவரத்து கழகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலகங்களில், 2012 முதல் தேர்வு முறைகேடுகள் நடந்துள்ளன.இதுகுறித்த விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும், உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த என்.எஸ்.சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல், அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு பிளீடர் ஆர்.அனிதா, தேர்வாணையம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆஜராகினர்.மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில், டி.எஸ்.பி., தாக்கல் செய்த அறிக்கையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி, 2019ல் நடந்த குரூப் - 4 தேர்வு தொடர்பான வழக்கின் கோப்புகள், ஆவணங்கள் மற்றும் மேலும் இரண்டு வழக்குகளின் ஆவணங்கள், சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விட்டன.போக்குவரத்து கழகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் நோக்கம் நிறைவேறி உள்ளதால், விசாரணையை முடித்து வைத்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us