தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.பார்ம் துவக்க கோரிக்கை

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.பார்ம் துவக்க கோரிக்கை

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.பார்ம் துவக்க கோரிக்கை


UPDATED : ஜன 28, 2010 12:00 AM

ADDED : ஜன 28, 2010 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2010 12:00 AM ADDED : ஜன 28, 2010 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பி.பார்ம் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படிப்புகள் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது பற்றி கோவை மருத்துவக் கல்லூரி பார்மசி துறையில் டி.பார்ம் படிக்கும் மாணவ மாணவியர் கூறியதாவது:
கோவையின் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் தமிழக அரசு, கல்விக்கும் இணையான முக்கியத்துவம் தர வேண்டும். கோவை மருத்துவக் கல்லூரியில் தற்போது ‘டிப்ளோமா இன் பார்மசி அண்டு டிப்ளோமா இன் நர்சிங்’ ஆகிய படிப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால் இதே துறையில் மேற்படிப்புகள் இல்லை.


ஆகவே கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காலேஜ் ஆப் பார்மசியில், பி.பார்ம் வகுப்பும், காலேஜ் ஆப் பார்மசியில் பி.எஸ்சி., நர்சிங் வகுப்பும் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் அரசு சார்பில் இப்படிப்புகள் எங்கும் நடத்தப்படாததால் தனியாரிடம் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.


இதனால் இப்படிப்புகளை படிக்க ஆசைப்படும் ஏழை மாணவியருக்கு, இப்படிப்பு நிறைவேறாத கனவாகவே உள்ளது. நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள இக்குறையை, கோவையில் நடைபெறவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக துவக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மாணவ மாணவியர் தெரிவித்தனர். தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் உயர்கல்வி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை மாணவ மாணவியர் அனுப்பி வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us