தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கேட் திறக்கப்படுவது எப்போது?

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கேட் திறக்கப்படுவது எப்போது?

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கேட் திறக்கப்படுவது எப்போது?


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு பகுதி வாசல் திறக்கப்பட்டு மருத்துவமனையில் தற்போதுள்ள நுழைவு வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டங்கள் இரு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 500 உள் நோயாளிகள் படுக்கை கொண்ட 5 தளங்கள் கொண்ட கட்டடம், மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளை பார்ப்பதற்காக ஏராளமானோர் தினசரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.அவசர சிகிச்சை வார்டு இன்று வரை பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அதி நவீன வசதி கொண்ட புதிய கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் அதனை அதிகாரிகள் இன்று வரை பயன்படுத்தாததால் பழைய கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். அவசர நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே வர முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் புதிதாக மேற்குப் புறத்தில் கேட் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பணிகள் நிறைவடைந்த பிறகும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை திறந்தால் உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும், நோயாளிகள் வெளியே செல்லும் வாகனங்களுக்கு மற்றொரு வழியையும் பயன்படுத்தினால் ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு பகுதி கேட்டை உடனடியாக திறக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us