தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு நீட் பாரமாக இல்லை: தி.மு.க.,வினருக்கு தான் பாரம்

மாணவர்களுக்கு நீட் பாரமாக இல்லை: தி.மு.க.,வினருக்கு தான் பாரம்

மாணவர்களுக்கு நீட் பாரமாக இல்லை: தி.மு.க.,வினருக்கு தான் பாரம்


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
அமைச்சர் உதயநிதி, தி.மு.க.,விற்கு நீட் பாரமாக உள்ளது என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.தேனியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
 தென் தமிழகத்தில் சில ஆண்டுகளாக சமூக நல்லினக்கம் நிலவியது. தற்போது சமூக பதட்டம் அதிகரித்துள்ளது. மனித உரிமை மீறல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மாணவர்களுக்கு நீட் பாரமாக இல்லை. அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் பல மாநிலங்களில் மருத்துவம் படிக்கின்றனர். அமைச்சர் உதயநிதி, அவரது குடும்பம், தி.மு.க., வினருக்கு நீட் பாரமாக உள்ளது. தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவகல்லுாரிகளில் அவர்கள் விருப்பம் போல் மாணவர்கள் சேர்க்கை இல்லை. கொடுத்து வாக்குறுதியை காப்பாற்றாததால் 2024 லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு முட்டை தான் கிடைக்கும்.மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போதும் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.ஸ்டாலின் உயர்ரக கார் வாங்கிய போதும் சோதனை நடந்தது. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு எனில் ஏன், மற்ற தி.மு.க., அமைச்சர் வீட்டில் சோதனை நடக்க வில்லை. வருமான வரித்துறையினர் ஆய்விற்குப்பின் என்ன கைப்பற்றினர் என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஆர்.எஸ்.பாரதி நாகலாந்து மக்களை நாய்க்கறி உண்ணுபவர்கள் என பேசியது கண்டிக்கதக்கது. மாட்டு இறைச்சி உண்பது பற்றி பேச்சு எழுந்தபோது, தி.மு.க., கூட்டணியில் உள்ளவர்கள் அது எங்கள் உரிமை என பேசினர். அவர் மொத்த பழங்குடியின மக்களையும் அவமதித்துள்ளார்.ஸ்டாலின் ஆர்.எஸ்., பாரதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். நிறைவேறாத சட்டம் என தெரிந்தும் சட்டசபையில் மசோதா நிறைவேற்றுகின்றனர். தி.மு.க., வினர் தங்களை இந்தியர்களாக உணர வேண்டும் என்றார்.மாநில துணை பொதுச் செயலாளர் பாலசுந்தர், ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் துணைச் செயலாளர்கள் வேல்மணி, அய்யனார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us