UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 04:56 PM
அ நிறம் | அளவு
மதுரை:
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் சிறந்தவர்களுக்கு 2023-24 ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது ஜனவரியில் வழங்கப்பட உள்ளது.மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட அறிஞர்கள், கவிஞர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து நவ.,10க்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
