தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவர்னர் மாளிகையில் மாணவர்கள் கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தல்

கவர்னர் மாளிகையில் மாணவர்கள் கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தல்

கவர்னர் மாளிகையில் மாணவர்கள் கண்டுபிடிப்பு காட்சிப்படுத்தல்


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 04:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த வேளாண் கண்காட்சியில், காரைக்குடி அழகப்பா பல்கலை மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு காட்சிபடுத்தப்பட்டது.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு வந்திருந்த கவர்னர் ஆர்.என். ரவி, அறிவியல் ஆராய்ச்சி மாணவர்களின் ரூசா 2.0 இ.ஐ.ஆர்., திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேளாண் சார்ந்த கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இதனை கவர்னர் மாளிகையில் நடைபெறும் வேளாண் விஞ்ஞானிகள் விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர் கண்காட்சியில் காட்சிப்படுத்த அறிவுரை வழங்கினார்.இதையடுத்து துணைவேந்தர் க. ரவி, அறிவியல் புல முதன்மையர் ஜெயகாந்தன் தலைமையில் ஆராய்ச்சி குழுவினர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கவர்னர் மாளிகையில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கவர்னர் ரவி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் தொழில் முனைவோர்கள் பார்வையிட்டனர். அதில் பயிர் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் குறைந்த செலவிலான உரங்களை உருவாக்கிய ஆய்வுக்குழுவினரை ஊக்குவித்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us