தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை கேட்கிறது பா.ஜ.,

தேர்வு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை கேட்கிறது பா.ஜ.,

தேர்வு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை கேட்கிறது பா.ஜ.,


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 08:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகா தேர்வு ஆணைய தேர்வு முறைகேடு தொடர்பாக, அமைச்சர் பிரியங்க் கார்கே உடனடியாக பதவி விலக வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட வேண்டும், என கர்நாடக மாநில பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் வலியுறுத்தினார்.பெங்களூரு மல்லேஸ்வரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகா தேர்வு ஆணையம் நடத்திய தேர்வு முறைகேடு, அதில் அமைச்சர் பிரியங்க் கார்கேயின் பங்கு குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பரிந்துரைக்க வேண்டும்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் பற்றி இழிவாகப் பேசும் பிரியங்க் கார்கே, இன்று இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் மையப்புள்ளியாக இருக்கிறார். அவர் அமைச்சராக நீடிக்க தார்மீக உரிமை இல்லை.கியோனிக்ஸ் எனும் கர்நாடக மாநில எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி கார்ப்பரேஷன் நிறுவன நிர்வாக இயக்குனர், ஒப்பந்ததாரர்களிடம் 12 சதவீதம் கமிஷன் கேட்பதாக, கர்நாடக மாநில எலக்ட்ரானிக்ஸ் வளர்ச்சி கார்ப்பரேஷன் நிறுவன ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் வசந்த் பங்கேரா குற்றஞ்சாட்டி உள்ளார்.கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளராக மாற முயன்ற காங்கிரஸ் தொண்டர் ஆர்.டி.பாட்டீல், கலபுரகி கே.இ.ஏ., தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவர். ஆர்.டி.பாட்டீலுக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக தேர்வில் ஏமாற்றப்பட்ட தேர்வர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.முறைகேடு சம்பவம் வெளியாகி, ஆறேழு நாட்களுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆர்.டி.பாட்டீலை தப்பிக்க அரசு அனுமதித்துள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளிக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கவில்லை என கூறும் அவர், ஏன் சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என்கிறார். சி.பி.ஐ., விசாரணை தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது உள்துறை அமைச்சரின் பணி. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us