எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்
எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்
UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 08:32 PM
பெங்களூர்:
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்.1 விண்கலம் சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சூரியனின் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் தீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
