வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்
வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்
UPDATED : ஜன 29, 2010 12:00 AM
ADDED : ஜன 29, 2010 11:56 AM
சென்னை: வேப்பேரி, குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில், ‘வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
கல்லூரி முதல்வர் மாலதி வரவேற்றார். கருத்தரங்க நோக்கம் குறித்து செயலர் கவுதம் வேட் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலா துறைச் செயலர் இறையன்பு பேசியதாவது:
பெண்களுக்கு அன்பும், அரவணைப்பும் அதிகம். ஆரம்ப காலத்தில் வீட்டு விலங்குகளை பெண்கள் தான் வளர்த்தனர். விவசாய உற்பத்தியிலும் அவர் களின் பங்கு அதிகம் காணப்பட்டது. வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதே நிம்மதியாக வாழ்வதற்குத் தான். அந்த பணத்தை நல்ல வழியில் சம்பாதித்தால், செலவழிக்கும் போதும் சந்தோஷமாக இருக்கும்.
பெண்கள் சம்பாதிப்பது கணக்கில் இடம் பெறுவதில்லை. உதாரணமாக, பெண்கள் சமைத்தால் அது வழக்கத்தில் உள்ள ஒன்றாகி விடுகிறது. ஆனால், ஆண்கள் ஓட்டலில் சமைத்தால், அது சம்பாதிப்பதாக கணக்கிடப்படுகிறது. கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின் றனர். எந்த தொழில் செய்தாலும் அதில் புதுமையை புகுத்த வேண்டும்; செய்யும் தொழிலில் ஒரு பக்தி வேண்டும்; எந்த தொழிலானாலும் ஆர்வத்துடன் பணியாற்றினால் மகிழ்ச்சியை தரும். இவ்வாறு இறையன்பு பேசினார்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் குட்சியா காந்தி பேசுகையில், ‘எந்த நாட்டிலும் பெண்களால் பொருளாதார உயர்வு ஏற்படுகிறது. பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்தால் தான், நாடு முன்னேற்றம் அடைந்ததற்கு அடையாளம் என அம்பேத்கரும், நேருவும் கூறியுள்ளனர்.
பெண்கள் கல்வி கற்றால் குடும்பமும், நாடும் வளம் பெறும் என்று பாரதி பாடியுள் ளார். பெண்கள் முன்னேற்றத் திற்கு மகளிர் சுய உதவிக் குழு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அதன் மூலம் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொழில் துவங்க நினைக்கும் பெண்கள், முதலீடு செய்ய வழியில்லாமல் உள்ளனர். சிறு தொழில் துவங்கினாலும் திறமை மிகவும் அவசியம்’ என்றார்.
