கோவை வந்த பிரான்ஸ் மாணவர்கள்: கல்விமுறை கண்டு வியப்பு
கோவை வந்த பிரான்ஸ் மாணவர்கள்: கல்விமுறை கண்டு வியப்பு
UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 10:42 AM
கோவில்பாளையம்:
பரிமாற்றத் திட்டத்தில் பிரான்ஸ் மாணவர்கள் கோவில்பாளையம் பள்ளிக்கு வந்தனர்.பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவுகளில் படித்து வரும் பள்ளி மாணவர்கள் இருவர், மாணவியர் ஆறு பேர், ஆசிரியர்கள் இருவர், என 10 பேர் மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தில் கோவில்பாளையத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு 10 நாள் பயணமாக வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக வகுப்பறைகளில் கற்பித்தலை ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் நாட்டு கல்வி முறை குறித்து இங்கு கூறினர்.பிரான்ஸ் மாணவர்கள் கூறுகையில், அங்கு பிரெஞ்ச் மொழியில் தான் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. இங்கு மூன்று முதல் ஐந்து வகையான பாடத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இங்குள்ள பாடத்திட்டம் வியப்பாக உள்ளது என்றனர்.
