தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மூலிகைகளை பாதுகாக்க வேண்டும்! வனக்கல்லுாரி முதல்வர் பேச்சு

மூலிகைகளை பாதுகாக்க வேண்டும்! வனக்கல்லுாரி முதல்வர் பேச்சு

மூலிகைகளை பாதுகாக்க வேண்டும்! வனக்கல்லுாரி முதல்வர் பேச்சு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:
வனப்பகுதியில் அழிந்து வரும் மூலிகை தாவரங்களை பாதுகாக்க வேண்டும் என வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் பேசினார்.மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வன உயிரியல் மற்றும் மர மேம்பாட்டு துறை சார்பில், மருத்துவ தாவரங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.இதில் வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது:
வனப்பகுதியில் ஏராளமான மருத்துவ குணமுடைய மூலிகை தாவரங்கள் உள்ளன. இந்த தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. இவற்றை கண்டறிந்து வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும். மலைவாழ் மக்களுடன் வனத்துறை இணைந்து, அழிந்து வரும் மர இனங்களான சந்தனம், செம்மரம் ஆகியவற்றை பாதுகாத்து, மீண்டும் அதை அதிகளவில் வளர்க்கச் செய்ய வேண்டும்.மருத்துவ செடிகள் மற்றும் மரங்களில் இருந்து கிடைக்கும் சிறுவனப் பொருட்களை, சந்தை நிலவரம் அறிந்து, அதை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us