தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மரண வலி தணிப்பு சிகிச்சை: விரைவில் புதிய பட்டப்படிப்பு

மரண வலி தணிப்பு சிகிச்சை: விரைவில் புதிய பட்டப்படிப்பு

மரண வலி தணிப்பு சிகிச்சை: விரைவில் புதிய பட்டப்படிப்பு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, பேலியம் இந்தியா அமைப்புடன் இணைந்து, மரண வலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்த ஒருநாள் பயிலரங்கத்தை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, சென்னையில் நேற்று நடத்தியது.துணை வேந்தர் நாராயணசாமி பேசியதாவது:
புற்றுநோய் மற்றும் ஆட்கொல்லி உள்ளிட்ட கடும் நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது தான், பேலியேட்டிவ்&' சிகிச்சை முறை.இந்த பல்கலையில், முதன்முறையாக, மரண வலி தணிப்பு மற்றும் தடுப்பு சிகிச்சை குறித்து டாக்டர்களுக்கும், பிற நலவாழ்வு பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில், முதன்முறையாக பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இப்பல்கலை இந்திய அளவில், 800க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லுாரிகளுடன், 36 ஆண்டுகளாக சிறந்த முறையில் கல்வி பணியாற்றி, லட்சக்கணக்கான டாக்டர்களை உருவாக்கி உள்ளது.இந்நிலையில், பேலியேட் டிவ் கேர் என்ற மரண வலி தணிப்பு, தடுப்பு சிகிச்சை மற்றும் வாழ்க்கை தர மேம்பாட்டு சிகிச்சைக்கான, பி.எஸ்சி., மற்றும் எம்.டி., ஆகிய இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகள் அடுத்து வரும் கல்வியாண்டு முதல் துவங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.தேசிய பேலியேட்டிவ் அமைப்பு தலைவர் ராஜகோபால் பேசியதாவது:அதிகம் அறியப்படாத இச்சிகிச்சை முறை குறித்து, பாதிக்கப்பட்டு உள்ள நோயாளிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், கருத்தரங்கம் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us