தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பேருந்துகளில் சாகச பயணம் போலீசார் மாணவர்களுக்கு எச்சரிக்கை

அரசு பேருந்துகளில் சாகச பயணம் போலீசார் மாணவர்களுக்கு எச்சரிக்கை

அரசு பேருந்துகளில் சாகச பயணம் போலீசார் மாணவர்களுக்கு எச்சரிக்கை


UPDATED : நவ 10, 2023 12:00 AM

ADDED : நவ 10, 2023 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2023 12:00 AM ADDED : நவ 10, 2023 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இயங்கி வரும் அரசினர் கலைக் கல்லுாரி மற்றும் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாவில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்து வாயிலாக திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிகளில் தொங்கியவாறும், ஜன்னலை பிடித்து தொங்கிய வாறும், பேருந்து கூரையில் ஏறி ஆபத்தான நிலையில் சாகச பயணம் செய்து வருகின்றனர்.மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை போலீசார் மற்றும் போக்குவரத்து ஓட்டுனர், நடத்துனர்கள் பலமுறை மாணவர்களை கண்டித்தும் தொடர்ந்து சாகச பயணம் மேற்கொண்டும் வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யானது.இதையடுத்து நேற்று மாவட்ட எஸ்.பி.சீபாஸ் கல்யாண் உத்தரவுபடி திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் அரசு பேருந்துகளை கண்காணித்தனர்.திருத்தணி கமலா தியேட்டர், சித்துார் ரோடு, பைபாஸ் சாலை மேல்திருத்தணி, முருக்கம்பட்டு, கே.ஜி கண்டிகை, வேலஞ்சேரி, சூர்யநகரம் ஆகிய எட்டு இடங்களில் போலீசார் நின்று அவ்வழியாக வந்த அரசு பேருந்துகளில் படியில் தொங்கிவாறு வந்த பேருந்தை நிறுத்தி மாணவர்களை இறக்கினர். பின் போலீசார் இதுபோன்ற ஆபத்தான பயணம் செய்யக்கூடாது, படிகள் மற்றும் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்வது, பேருந்தின் நிழற் கூரையின் மீது ஏறி பயணம் செய்தால் வழக்குப் பதியப்படும்.வழக்கு தொடர்ந்தால், உங்களுக்கு அரசு வேலை கிடைப்பதில் சிக்கில் ஏற்படும். ஆகையால் உங்கள் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்புகிறோம் என போலீசார் மாணவர்களிடம் அறிவுரை வழங்கினர். பெரும்பாலான மாணவர்கள் போலீசாரிடம் இனிமேல் படியில் தொங்கியவாறு பயணம் செய்ய மாட்டோம் என உறுதியளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us