UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:29 PM
இன்ஜினியரிங்கில் முதுநிலை படிப்புகளை மேற்கொள்ளவும், மத்திய அரசின் பொது துறை நிறுவனங்களில் பணியில் சேரவும், கேட் என்ற பொது நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்.இதில், ஆண்டுதோறும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். ஒரு லட்சம் பேர் தகுதி பெறுவர். இந்த தேர்வுக்கு பட்டதாரிகள், பல்வேறு பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்தி படிப்பது வழக்கம்.இந்நிலையில், கேட் நுழைவு தேர்வுக்கான பயிற்சி பாட குறிப்புகள், சென்னை ஐ.ஐ.டி.,யின் என்.பி.டெல்., என்ற தளத்தில், https://gate.nptel.ac.in/ இணைப்பில் இலவசமாக வெளியிடப்பட்டு உள்ளது.இதில், கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக, கேட் தேர்வில் இடம் பெற்ற கேள்விகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
