தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் மருத்துவ கல்லுாரி வேப்பூரில் அமைகிறது

ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் மருத்துவ கல்லுாரி வேப்பூரில் அமைகிறது

ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளையின் மருத்துவ கல்லுாரி வேப்பூரில் அமைகிறது


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை மூலம் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் வேப்பூர் பகுதியில் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டது.வங்கி கடன், வட்டிச் சுமை, வசூல் வேட்டை இல்லாமல் அறம் சார்ந்த கொள்கை முடிவுடன் 111 நல்லுள்ளம் கொண்ட அறங்காவலர்கள் ஒருங்கிணைந்து ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, முன்னாள் எம்.பி., அப்துல் ரஹ்மான் பொறுப்பேற்று அனைவரையும் கருத்துக்களை கேட்டறிந்து செயல்பட்டு வருகிறார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படி, வேப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்திற்கு மருத்துவ கல்லுாரி துவங்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஆறு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் ஐந்து மாவட்டங்கள் என வரையறை செய்திருக்கிறோம்.முதல் மண்டலமாக திருச்சியை தேர்ந்தெடுத்து பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, 200 ஏக்கரில் டவுன்ஷிப்பும், 100 ஏக்கரில் கல்வி நிறுவனங்கள் உருவாக்க திட்டமிட்டு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலுார் மாவட்டம் வேப்பூரில் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, மருத்துவக் கல்லுாரி மற்றும் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 4ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.தொடர்ந்து, ஸாலிஹீன் கல்வி அறக்கட்டளை மூலமாக தங்கும் விடுதியுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி, அறிவியல் கலை கல்லூரி, பொறியியல் கல்லுாரி, சட்டக் கல்லூரி, நர்சிங் கல்லுாரி எனப் பல்வேறு நிறுவனங்களை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதி நவீன வசதிகளுடன் பெரிய பள்ளிவாசலும் கட்டப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us