தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்; அலகாபாத் பல்கலையில் அறிமுகம்

எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்; அலகாபாத் பல்கலையில் அறிமுகம்

எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்; அலகாபாத் பல்கலையில் அறிமுகம்


UPDATED : நவ 11, 2023 12:00 AM

ADDED : நவ 11, 2023 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2023 12:00 AM ADDED : நவ 11, 2023 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரயாக்ராஜ்:
உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., - எம்.பி.ஏ., படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பகவான் கிருஷ்ணர், சாணக்கியர் போன்றோரின் நிர்வாக திறமைகள் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலை அமைந்துள்ளது. இங்கு வணிகவியல் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்பு துவங்கப்பட்டுஉள்ளது. இதில், முதல் ஆண்டுடன் ஒருவர் வெளியேறினால் ஓராண்டு சான்றிதழும், இரண்டாண்டுடன் வெளியேறினால் டிப்ளமா சான்றும், மூன்றாம் ஆண்டில் வெளியேறினால் பி.பி.ஏ., சான்றும் கிடைக்கும். இதனால் இப்படிப்பிற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த ஒருங்கிணைந்த பி.பி.ஏ., - எம்.பி.ஏ., படிப்பில் மாணவர்கள், பகவான் கிருஷ்ணர் கையாண்ட நிர்வாக மேலாண்மை குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இவற்றை பகவத் கீதை, உபநிஷதங்கள் வாயிலாக மாணவர்கள் பயில உள்ளனர். சாணக்கியரின் நிர்வாக யுக்திகள் குறித்த பாடமும் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, மனதை அமைதிப்படுத்த அஷ்தங்க யோகாவும் சேர்க்கப்பட்டுள்ளது.அத்துடன், முதல் முறையாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ஜெ.ஆர்.டி., டாடா, பிர்லா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி ஆகியோரின் புத்திசாலித்தனமான நிர்வாக முடிவுகளையும் பாடமாக தொகுத்துள்ளனர். இது பற்றி இப்படிப்பிற்கான ஒருங்கிணைப்பாளர் ஷெபாலி நாதன் கூறியதாவது:
இந்திய நிர்வாகவியல் சிந்தனை என்ற பாடத்தில் ஆன்மிகம், நிர்வாகவியல், கலாசார கூறுகள், மனித அறங்கள், வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், யோகா ஆகியவை பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us