UPDATED : நவ 12, 2023 12:00 AM
ADDED : நவ 12, 2023 11:55 AM
தேனி:
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்பிரமணிக்கு 2022க்கான துாய தமிழ்பற்றாளர் விருது வழங்கப்பட்டது.தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சுப்பிரமணி 56, தேனி தமிழ்ச்சங்க தலைவராக உள்ளார். இவர் விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க, கேரளக் கோயில்கள், தமிழகக் கோயில்கள் சாப விமோசனக்கதைகள் உள்ளிட்ட 18 நுால்கள் எழுதி உள்ளார். தினமலர் நாளிதழில் ஆன்மிக மலரில் அசுரவதம் எனும் ஆன்மிக தொடரை எழுதி வருகிறார்.மாநில அரசு இவருக்கு 2022க்கான துாய தமிழ் பற்றாளர் விருது வழங்கி உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் விருது, பரிசுத்தொகை ரூ.20 ஆயிரம் வழங்கினார். விருது பெற்றவரை தேனி தமிழ்ச்சங்க செயலாளர் பொன்முடி, பொருளாளர் முகமது பாட்ஷா உள்ளிட்டோர் பாராட்டினர்.
