அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் அறிவிப்பு
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் அறிவிப்பு
UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 10:10 AM
கோவை:
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதன்முறையாக கலைத்திருவிழா போட்டிகள் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, நடனம், இசை, நாடகம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ், 64 வகையான போட்டிகள் நடத்தப்படும். தனிநபர், குழு போட்டிகள் என பிரத்யேகமாக, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக, போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம், பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இப்போட்டிகள் நடப்பாண்டு முதல் நடத்த, தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டதால், மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 14 முதல் 17ம் தேதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் போட்டி நடத்தி, முதலிடம் பெறுவோர் மட்டும், மாவட்ட அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில அளவிலான போட்டிகள், வரும் 22 முதல் 25ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிக போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, கலையரசன், கலையரசி பட்டம் வழங்குவதோடு, வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
