UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 06:47 PM
சென்னை:
பள்ளி மாணவியர் விடுதிகளுக்கு, 75 லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மாணவியர் தங்கி படிக்கும், 368 விடுதிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள், 75 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 368 விடுதிகளுக்கு, தலா 20,000 ரூபாய் மதிப்பில், விளையாட்டு உபகரணங்கள் வாங்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது.ஒவ்வொரு விடுதிக்கும் தலா இரண்டு கேரம் போர்டுகள், நான்கு செஸ் போர்டுகள், எட்டு இறகுபந்து பேட், இரண்டு பெட்டி இறகுபந்து, இரண்டு வாலிபால், இரண்டு வாலிபால் வலை, இரண்டு கிரிக்கெட் பேட், இரண்டு பெட்டி டென்னிஸ் பந்து, நான்கு ஸ்டம்புகள், இரண்டு கால்பந்து, வாலிபால் கம்பம், போன்றவை வழங்கப்பட உள்ளன.
