ஓரிரு நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் தகவல்
ஓரிரு நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் தகவல்
UPDATED : நவ 14, 2023 12:00 AM
ADDED : நவ 14, 2023 07:29 PM
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்கின்றனர். அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம்; விடுமுறையை இதனை ஈடுசெய்யும் விதமாக மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம்.அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் தேர்வுக்கான பயிற்சிக்கு 46 ஆயிரத்து 216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29 ஆயிரத்து 279 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இரு தேர்வுகளையும் சேர்த்து எழுத 31,730 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் 1,07,225 மாணவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளனர்.10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் பாதிக்காத வகையில் ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாட்களில் அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
