தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மூன்று இறுதித்தேர்வுகள்; போராட்டம் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மூன்று இறுதித்தேர்வுகள்; போராட்டம் அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மூன்று இறுதித்தேர்வுகள்; போராட்டம் அறிவிப்பு


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
எஸ்.எஸ்.எல்.சி.,க்கு ஒரே ஆண்டில் மூன்று இறுதித்தேர்வு நடத்தும் அரசின் புதிய தேர்வுமுறையை கண்டித்து, வரும் 23, டிச., 1 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பி.யூ., கல்லுாரி முதல்வர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.கர்நாடகாவில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எஸ்.எஸ்.எல்.சி., வகுப்புக்கு இறுதித் தேர்வு நடக்கும். இந்தத் தேர்வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இத்தகைய மாணவர்கள், மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக, மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும்.ஆனால், தற்போதைய காங்கிரஸ் அரசு, ஆண்டுக்கு மூன்று இறுதி தேர்வுகள் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஒரு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அடுத்தடுத்து அதே ஆண்டில் மேலும் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழில் மறுதேர்வு என்று குறிப்பிடாமல், வழக்கமாக தேர்ச்சி பெற்ற மாணவர் என்றே குறிப்பிடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பி.யூ.சி., கல்லுாரி முதல்வர்கள் சங்கம், பேராசிரியர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கத்தினர், சமீபத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார். அப்போது, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு ஒரே ஆண்டில் மூன்று இறுதித் தேர்வுகள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.புதிய தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 23ம் தேதி கறுப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகத்துக்கு பேரணியாக சென்று மனுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அடுத்தகட்டமாக, டிசம்பர் 1ம் தேதி பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் இருந்து அனைத்து ஆசிரியர்களும் பெங்களூருக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us