தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதிபதி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

நீதிபதி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு

நீதிபதி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு


UPDATED : நவ 14, 2023 12:00 AM

ADDED : நவ 14, 2023 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2023 12:00 AM ADDED : நவ 14, 2023 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தமிழகம் முழுதும் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள, 327 நீதிபதிகள் பணியிடங்களை, 2024 மார்ச் 31ம் தேதிக்குள் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது உட்பட, நீதித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான 2,006 மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மாநிலம் வாரியாக விசாரணை நடத்தப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், தமிழகம் தொடர்பான மனு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, அமிகஸ் க்யூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.அதில், தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிபதிகள், சீனியர் சிவில் நீதிபதி மற்றும் ஜூனியர் சிவில் நீதிபதி பதவிகள் உட்பட அனுமதிக்கப்பட்ட 1,369 நீதிபதிகள் பணியிடங்களில், 327 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடப்பட்டு இருந்தது.அவற்றை நிரப்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டு இருந்தது. அவற்றை கேட்ட நீதிபதிகள், அனைத்து நடைமுறைகளையும் விரைவாக முடித்து, 2024, மார்ச் 31க்குள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.புதிய நீதிபதிகள் நியமனம்
நாட்டில் உள்ள ஐந்து மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிட மாற்றத்துக்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us