தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இல்லம் தேடி கல்வி மையங்களில் குழந்தைகள் தினவிழா கோலாகலம்

இல்லம் தேடி கல்வி மையங்களில் குழந்தைகள் தினவிழா கோலாகலம்

இல்லம் தேடி கல்வி மையங்களில் குழந்தைகள் தினவிழா கோலாகலம்


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
இல்லம் தேடி கல்வி மையங்களில், நேற்று குழந்தைகள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை மாவட்டத்தில், 6 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட, இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. பள்ளி முடித்து மாலை நேரங்களில் இயங்கும் இம்மையங்களில், தன்னார்வலர்கள் கொண்டு குழந்தைகளுக்கு பாட சந்தேகங்கள் விளக்கப்படுகின்றன. குழந்தைகள் தினமான நேற்று, பல மையங்களில், இனிப்புகள், பூங்கொத்து அளித்தல், போட்டிகள் நடத்தி பரிசளித்து, மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.ஒக்கிலிபாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தில், பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் லெனின்பாரதி, பரிசு வழங்கி பாராட்டினார்.மைய தன்னார்வலர்கள் அனுசுயா, பானுப்பிரியா ஆகியோர், குழந் தைகள் தின விழாவிற்கான ஏற்பாடுகள் செய்தனர். முன்னாள் பிரதமர் நேரு உருவப்படம் அடங்கிய, மாஸ்க் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல், பல மையங்களில் தன்னார்வலர்கள் முயற்சியால், குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us