தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் 500 மரக்கன்றுகள்

பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் 500 மரக்கன்றுகள்

பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையத்தில் 500 மரக்கன்றுகள்


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
தர்மபுரி அடுத்த மோதுார் அருகே, 27 ஏக்கர் பரப்பளவில், பெரியார் பல்கலைக் கழக பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு, ஆராய்ச்சி மையம், வனத்துறை, தர்மம் அறக்கட்டளை சார்பாக ஏற்கனவே, 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும், இந்த வளாகத்தில், ஆராய்ச்சி மையம், வனத்துறை, தர்மம் அறக்கட்டளை சார்பாக நேற்று, 500 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.விழாவுக்கு, பெரியார் பல்கலை கழக பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மைய இயக்குனர்(பொ) மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தர்மபுரி மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் அப்பாலநாயுடு மற்றும் தர்மம் அறக்கட்டளையினர், மாணவ, மாணவியருடன், மரகன்றுகளை நடவு செய்தனர்.மேலும், இந்த மரக்கன்றுகளை பராமரிக்க ஆராய்ச்சி மை வளாகத்தில் புதிய குட்டை அமைக்கப்பட்டு உள்ளதுடன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், தண்ணீர் விட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us