தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏரியை மீட்க மாணவர்கள் ஆய்வு: மண்டல மாநாட்டில் தேர்வு

ஏரியை மீட்க மாணவர்கள் ஆய்வு: மண்டல மாநாட்டில் தேர்வு

ஏரியை மீட்க மாணவர்கள் ஆய்வு: மண்டல மாநாட்டில் தேர்வு


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்:
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தேசிய அறிவியல், தொழில்நுட்ப பரிமாற்ற குழுமம் இணைந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை இந்தியா முழுதும் நடத்துகிறது. தமிழகத்தில் இந்நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. அதன்படி நடப்பாண்டு, உங்கள் சுற்றுச்சூழலை அறிந்து கொள்ளுங்கள் என துணை கருப்பொருள் கொடுக்கப்பட்டது.இதில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக், விக்னேஷ், பவளத்தானுார் ஏரியின் உயிர் பன்முகத்தன்மையை பாதுகாத்தல் தலைப்பை தேர்வு செய்தனர். தொடர்ந்து அந்த ஏரி ஆகாயத்தாமரை, கழிவுநீரால் மாசடைந்தது குறித்து, மக்களை சந்தித்து கள ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.மேலும் ஏரியை சுத்தமாக்கி, அதை சார்ந்து வாழும் பறவைகள், பூச்சி இனங்களை மீட்டெடுத்து உயிர் பன்முகத்தன்மையை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்தனர். இவர்களின் ஆய்வு அறிவியல் மாநாட்டில், சங்ககிரி கோட்டம், சேலம் மாவட்ட அளவில் தேர்வானது. தொடர்ந்து கடந்த, 4ல் கோவை, காரமடை தனியார் கல்லுாரியில் நடந்த மண்டல மாநாட்டில் தேர்வானது. இதனால் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக பள்ளி அறிவியல் ஆசிரியர் ராஜகுமாரன் செயல்பட்டார்.மாநில மாநாட்டில் வெற்றி பெற்றால் டிசம்பரில் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அதிலும் வெற்றி பெற்றால், &'குழந்தை விஞ்ஞானி&' பட்டம் ஜனாதிபதியால் வழங்கப்படும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us