இரட்டை காப்பிய கருத்தரங்கம் மாணவர்களுக்கு வாய்ப்பு
இரட்டை காப்பிய கருத்தரங்கம் மாணவர்களுக்கு வாய்ப்பு
UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 10:02 AM
சிலப்பதிகாரம், இரண்டாம் நுாற்றாண்டில் தமிழகத்தின் சமூக சூழல், வாழ்வியல், பண்பாடு குறித்த செய்திகள், கோவலன், கண்ணகி, மாதவி உள்ளிட்ட கதாபாத்திரங்களின் வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்துக்கு அடுத்தபடியாக, இலக்கிய மற்றும் காப்பிய அழகுடைய நுால் மணிமேகலை.இந்த காப்பிய தலைவி மணிமேகலை, சிலப்பதிகார நாயகன் கோவலன் மற்றும் மாதவியின் மகள் என்பதால், இது, தொடர் காப்பியமாக கருதப்படுகிறது. இந்த இரட்டை காப்பியங்கள் குறித்த திறனாய்வு கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில், அடுத்த மாதம் 7, 8ம் தேதிகளில், செம்மொழி நிறுவனத்தில் கருத்தரங்கம் நடக்க உள்ளது.ஆர்வமுள்ள ஆய்வு மாணவர்கள், workshopt@cict.in என்ற மின்னஞ்சல் முகவரியில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர், சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
