அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சேதமடைந்த சறுக்கு பாதை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சேதமடைந்த சறுக்கு பாதை
UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 10:23 AM
ராமநாதபுரம்: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்டது. மேலும் அதி நவீன 10 அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு ஆக.,ல் அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.இந்த புதிய கட்டடம் திறக்கப்பட்டதில் இருந்து தினமும் பிரச்னைகள் உருவாகி வருகிறது. தற்போது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கான சறுக்குப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த சறுக்குப்பாதை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.இதில் நோயாளிகளை வீல் சேர், வாகனங்களில் அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழை காரணமாக கட்டடத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. இது போன்று தொடரும் பிரச்னைகளால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
