தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் துார்வாரிய குளத்தில் நீர் நிரம்பியது

மாணவர்கள் துார்வாரிய குளத்தில் நீர் நிரம்பியது

மாணவர்கள் துார்வாரிய குளத்தில் நீர் நிரம்பியது


UPDATED : நவ 22, 2023 12:00 AM

ADDED : நவ 22, 2023 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2023 12:00 AM ADDED : நவ 22, 2023 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி அருகே குப்பாயூரணி கண்மாயை தி லிட்டில் கிங்டம் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் முயற்சியில் துார்வாரிய கண்மாய் நீர் நிரம்பி, விவசாயத்திற்கு பயன்படுகிறது.தேனி மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி குப்பாயூரணி கண்மாய் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கண்மாயில் நீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் கருவேலமரங்கள், முட்செடிகள் வளர்த்து காடு போல் இருந்தது. கண்மாயில் நீர் தேங்கினால் அருகில் உள்ள பூதிப்புரம், மஞ்சிநாயக்கனப்ட்டி, வாழையாத்துப்பட்டி, கெப்புரங்கன்பட்டி, வலையபட்டி ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் மட்டம் உயரவும், விவசாய நிலங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் பொது மக்கள் தெரிவித்தனர்.தேனி தி லிட்டில் கிங்டம் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் இந்த கண்மாய் துார்வார திட்டமிட்டனர். இப்பணி ஆக., 3ல் பள்ளி முதல்வர் சுஜாதா, தாளாளர் கண்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷியாமளா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் துவங்கியது. இதற்காக ரூ.2.75லட்சம் திட்டமதிப்பீடு தயார் செய்து மாணவர்கள் குழுக்கள் அமைத்து நிதி திரட்டினர்.மழைகாலம் துவங்குவதற்கு முன் கண்மாயை துார்வாரி முடிக்க திட்டமிட்டிருந்தனர். அக்., இறுதியில் ரூ.2.86 லட்சம் செலவில் கண்மாய் துார்வாரி முடிக்கப்பட்டது. மாணவர்களின் உழைப்பில் துார்வார துவங்கிய கண்மாய் கடந்த வாரம் பெய்த மழையில் நிரம்பி காட்சியளிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us