தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொட்டும் மழையில் பள்ளி சென்ற மாணவர்கள்

கொட்டும் மழையில் பள்ளி சென்ற மாணவர்கள்

கொட்டும் மழையில் பள்ளி சென்ற மாணவர்கள்


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, சில நாட்களாக பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதலே கன மழை பெய்ய துவங்கியது.காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 7:10 மணி முதல், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்ய துவங்கியது. காலை 9:00 மணியை கடந்தும் மழை விடாமல் பெய்து கொண்டிருந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் என, பள்ளி மாணவ- மாணவியரும், பெற்றோரும், டிவி முன் காத்திருந்தனர்.இருப்பினும், மாவட்ட நிர்வாகம் சார்பில், விடுமுறை சம்பந்தமாக எந்தவித அறிவிப்பும் வெளியாகததால், மாணவ- மாணவியர் அவசர அவசரமாக புறப்பட்டு, மழையில் நனைந்தும், குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் பள்ளிக்கு தாமதமாக சென்றனர்.மழை பெய்ததால், பள்ளி, கல்லுாரி, அலுவலகம் சென்றோர் மட்டுமின்றி, நடைபாதை வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வெளியில் நடமாடியோரும் அவதியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு செ.மீ.,யில், காஞ்சிபுரம்- 3.3, ஸ்ரீபெரும்புதுார் -2.3, வாலாஜாபாத் -0.9, செம்பரம்பாக்கம் 0.8, குன்றத்துார் -0.6, உத்திரமேரூர் 0.4.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us