தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு: மதிய உணவு ஏழைகளுக்கு வழங்கல்

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு: மதிய உணவு ஏழைகளுக்கு வழங்கல்

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு: மதிய உணவு ஏழைகளுக்கு வழங்கல்


UPDATED : நவ 23, 2023 12:00 AM

ADDED : நவ 23, 2023 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2023 12:00 AM ADDED : நவ 23, 2023 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
பள்ளிகளுக்கு திடீரென விடுமுறை அளிக்கப்பட்டதால், 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவுகள் தன்னார்வலர்கள் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால் நேற்று காலை 7:45 மணிக்கு புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமலில் உள்ளது.அட்சயபாத்திரா அமைப்பு மூலம் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து சுடசுட பள்ளிகளுக்கு அனுப்படுகிறது. வழக்கமாக பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் பணி முந்தைய நாள் இரவு 11:00 மணிக்கே காய்கறிகள் சுத்தம் செய்யும் பணி துவங்கி விடும்.அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி காலை 7:00 மணிக்குள் முதல் கட்ட உணவுகள் தயாராகி விடும். காலை 8:30 மணிக்கு 2ம் கட்ட உணவுகளான பொறியியல் உள்ளிட்டவை தயாராகி விடும். புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 46 ஆயிரம் மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்படும்.நேற்று காரகுழம்பு சாதம், தக்காளி சாதம், இனிப்பு பொங்கல் தயார் செய்யப்பட்டது. 90 சதவீத மதிய உணவு தயாரான நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை என திடீரென அறிவிக்கப்பட்டது.இதனால் தயார் செய்யப்பட்ட மதிய உணவுகள், பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் வீடற்ற ஏழைகள், சாலையோரம் வசிப்போர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us