UPDATED : நவ 23, 2023 12:00 AM
ADDED : நவ 23, 2023 02:30 PM
இது குறித்து, தமிழ் இணைய கல்விக் கழக இயக்குனர் காந்தி அறிக்கை:
தமிழக அரசு ஒருங்கிணைக்கும் பன்னாட்டு கணித்தமிழ் - 24 மாநாடு, பிப்ரவரி 8 முதல் 10 வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் இணைய கல்விக் கழகம், புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து, ஹேக்கத்தான் போட்டியை நடத்துகிறது.தமிழ் பேச்சை புரிந்து கொள்ளுதல்; தமிழ் உள்ளடக்க உருவாக்கம்; தமிழ் உரையாடி; தமிழ் இயற்கை மொழி ஆய்வு உட்பட, 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில், கல்லுாரி, பல்கலை மாணவர்கள், ஆர்வலர்கள், மொழி தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்கள் பங்கேற்கலாம்.போட்டி குறித்த விபரங்களுக்கு, www.kanitamil.in/#/hackathon என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
