தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ஆற்றலில் வளரும் தமிழக மாணவர்கள்!

அறிவியல் ஆற்றலில் வளரும் தமிழக மாணவர்கள்!

அறிவியல் ஆற்றலில் வளரும் தமிழக மாணவர்கள்!


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
அறிவியலும் ஆற்றல் மற்றும் புரிதலில் பெங்களூரு, புதுடில்லி மாணவர்களுக்கு ஈடாக நம் மாணவர்களும் வளர்ந்து வருகின்றனர் என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், ஏ.வி.பி., பள்ளி குழுமங்களில் பயிலும், பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உங்கள் கனவுகளை தேடி அடையுங்கள் எனும் தலைப்பில், இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் தருகேஷவ் பங்கேற்றார்.  மிஷன் இன் சயின்ஸ் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் மாணவர்கள் சேருவதற்கான படிநிலை என்ன, பணியின் தன்மை எப்படி என்பது குறித்து, விரிவாக விளக்கினார். இந்தியக் கல்வி முறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் உலகளாவிய தேவை உள்ளது. அறிவியலும் ஆற்றல் மற்றும் புரிதலில் பெங்களூரு, புதுடில்லி மாணவர்களுக்கு ஈடாக, தமிழக மாணவர்களும் வளர்ந்து வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, நிகழ்வுக்கு ஏ.வி.பி., பள்ளி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பொருளாளர் லதாகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஏ.வி.பி., பள்ளி முதல்வர்கள் டயானா, பிரியா, பிரமோதினி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us