தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை., அளவில் தங்கம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

பல்கலை., அளவில் தங்கம் கல்லுாரி மாணவர்கள் சாதனை

பல்கலை., அளவில் தங்கம் கல்லுாரி மாணவர்கள் சாதனை


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 04:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 04:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலை அரசு கலைக்கல்லுாரியைச்சேர்ந்த 15 மாணவர்கள் பல்கலை., தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.கடந்த கல்வியாண்டில் பல்கலை தேர்வுகள் நடந்தன. இதல் இப்பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளின் மாணவர்கள் தேர்வுகளை எழுதினர். இந்நிலையில், பாரதியார் பல்கலை., தேர்வு முடிவுகளின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இக்கல்லுாரியைச்சேர்ந்த நான்கு மாணவர்கள் தங்கப்பதக்கமும், இரண்டு மாணவர்கள் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.இளநிலை புள்ளியியல் துறை மாணவி பாண்டீஸ்வரி, முதுநிலை புள்ளியியல் துறை மாணவி சந்தியா, முதுநிலை வேதியியல் துறை மாணவர் கிஷோர், முதுநிலையில் சுற்றுலாவியல் துறை மாணவி ஷாலினி உள்ளிட்டோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் பெற்றுள்ளனர்.தொடர்ந்து இளநிலை அரசியல் அறிவியல் துறை மாணவி வேதநாயகி, முதுநிலை சுற்றுலாவியல் துறை மாணவர் பத்மநாதன் உள்ளிட்டோர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.மேலும், இளநிலையில் மாணவர்கள் பிரபாகரன், உதயமலர், லிடியா, ரமணி, அர்ஸ்மா, பொன்ஜீவன், சத்யசுப்ரபானு, முதுநிலையில் அனிஸ் பாத்திமா உள்ளிட்டோர் பல்கலை., அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் கல்யாணி, துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us