தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட கவிதை போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட கவிதை போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்

மாவட்ட கவிதை போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 04:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
இளம் கவிஞர் விருதுக்கான மாவட்ட கவிதை போட்டியில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இளம் கவிஞர் விருதுக்கான, வட்டார அளவில் கவிதை போட்டி நடத்தப்பட்டது. போட்டியை பள்ளித் தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நடுவர்களாக ஆசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன், கார்த்திகா ஆகியோர் செயல்பட்டனர்.கவிதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியர், நேற்று, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட கவிதைப் போட்டியில் கலந்து கொண்டனர். அதில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, எபிரோனியாநிஷா முதலிடம் பிடித்தார்.அவர், வரும், 30ல், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான கவிதைப்போட்டியில் பங்கேற்கவும் உள்ளார். மாநில போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியரின் படைப்புகளில் இருந்து, ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு இளம் கவிஞர் விருது வழங்கப்படவும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us