UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:32 AM
வாழப்பாடி:
உலக மரபு வார விழாவை முன்னிட்டு,சேலம் வரலாற்று ஆய்வு மையம்,உலகத் தமிழ்க் கழகம்( வாழப்பாடி கிளை) மற்றும்வாழப்பாடி அரிமா சங்கம்இணைந்து,சர்வதேச நாடுகளின்நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் தபால் தலைகள் கண்காட்சி, சேலம் மாவட்டம்வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில தனியார் பள்ளி வளாகத்தில், நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.இவ்விழாவிற்குசேலம் வரலாற்று ஆய்வு மைய செயலர் பொன்னம்பலம் வரவேற்றார். வாழப்பாடி அரிமா சங்க பட்டயத்தலைவர் சந்திரசேகரன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.பன்னாட்டு நாணயம் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர் வீரமணி வீராசாமி, நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் குறித்து விளக்கவுரையாற்றினர்.வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி, சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெங்கடேசன், அரிமா மாவட்ட ஜிஎல்டி ஒருங்கிணைப்பாளர் மோதிலால்,வாழப்பாடி அரிமா சங்க அறக்கட்டளை நிறுவனர்தேவராஜன், மண்டல தலைவர் பாபு,வட்டாரத் தலைவர் ஜவஹர்,உலகத் தமிழ்க் கழகம், வாழப்பாடி கிளை தலைவர்பெரியார்மன்னன், இலக்கியப் பேரவை செயலர் எம்கோ உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
