சென்னையில் உலக வர்த்தக மாநாடு சாலைகளை சீரமைக்க ரூ.100 கோடி
சென்னையில் உலக வர்த்தக மாநாடு சாலைகளை சீரமைக்க ரூ.100 கோடி
UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:33 AM
சென்னை:
சென்னையில், அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மவுன்ட் - பூந்தமல்லி சாலை உள்ளிட்ட 260 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளன.இந்த சாலைகளில், பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய், மழைநீர் கல்வெர்டுகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன. இதனால், சாலைகளை சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், பல சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, குண்டும், குழியும் உருவாகி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 2024ம் ஆண்டு ஜன., மாதம் உலக வர்த்தக மாநாடு நடக்கவுள்ளது.இதற்காக, அரசிடம் 100 கோடி ரூபாயை சிறப்பு நிதியாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கேட்கப்படவுள்ளது. சாலை பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள், இது அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
