UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:34 AM
திருவள்ளூர்:
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கான, 23 வது கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அஞ்சல் வழி மற்றும் பகுதி நேரம், புதிய பாடத்திட்டத்தின்படி விரைவில் துவங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், www.tncuicm.com என்ற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய், இணைய வழியில் செலுத்த வேண்டும். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி. ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இதற்கான பயிற்சிக் கட்டணம், 20, 850 ரூபாய். மேலும் விவரங்களுக்கு அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், கலெக்டர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 044- 27237699 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
