தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச அங்கீகாரம் பெற்ற குழந்தைகளுக்கான கீதம்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற குழந்தைகளுக்கான கீதம்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற குழந்தைகளுக்கான கீதம்


UPDATED : நவ 25, 2023 12:00 AM

ADDED : நவ 25, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2023 12:00 AM ADDED : நவ 25, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மும்பையில் ஐ.நா., சிறுவர் நிதியம் சார்பில் நடந்த குழந்தைகளுக்கான பிரார்த்தனை மற்றும் செயலுக்கான சர்வதேச தினவிழாவில் மதுரை குயின் மீரா பள்ளியின் 12 மாணவர்கள் பாடிய குழந்தைகளுக்கான கீதம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.சினிமா பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய அன்பே எங்கள் பாதை அறிவே எங்கள் பயணம்... என துவங்கும் இப்பாடலுக்கு அனில் சீனிவாசன் இசை அமைத்து, பள்ளி இயக்குநர் அபிநாத் சந்திரன் தயாரித்துள்ளார். உலக மாணவர்களுக்காகவும், அன்பை போதித்து அனைத்து உயிர்களின் சமத்துவத்தை குறிப்பிட்டிருக்கும் இப்பாடல் வரிகள் உலக குழந்தைகளுக்கான கீதமாக அந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அபிநாத் சந்திரன் கூறியதாவது: 
உலக் குழந்தைகளுக்கான பொதுவான கீதமாக இது தயாரிக்கப்பட்டது. ஐ.நா., யுனிசெப், அரிகாதோ இன்டர்நேஷனல், சாந்தி ஆசிரமம் போன்ற அமைப்புகள் பாராட்டை பெற்றது இப்பள்ளிக்கு கிடைத்த பெருமை.இளம் தலைமுறையினருக்கு அன்பை பாதையாகவும், அறிவை பயணமாகவும் ஏற்றுக்கொள்ளும் இப்பாடலின் வரிகள் மூலம் ஐ.நா., வலியுறுத்தும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளடக்கிய வரிகளாக அமைந்து உலகளாவிய பாராட்டை பெற்றுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us