ஒரே நாளில் பயிற்சி, கலந்தாய்வு: பள்ளிகளில் தேர்வு நடத்த ஆளில்லை
ஒரே நாளில் பயிற்சி, கலந்தாய்வு: பள்ளிகளில் தேர்வு நடத்த ஆளில்லை
UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 11:04 AM
சேலம்:
தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நவ., 27ல், அந்தந்த வட்டார வள மையங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்வதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அதே நாளில் நடக்கிறது. மேலும் 2வது இடைத்தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வும் அன்றே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
வரும் 27ல் கார்த்திகை பவுர்ணமி என்பதால் பல ஆசிரியர்கள் ஆர்.எல். எனும் மதம் சார்ந்த பண்டிகைக்குரிய விடுமுறை எடுக்கின்றனர். கலந்தாய்வு பயிற்சிக்கு ஆசிரியர்கள் செல்வதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும். அதை வைத்தே இடைத்தேர்வு ஆன்லைன் தேர்வும் நடத்த வேண்டும். ஒரே நாளில் இவை அனைத்தும் சாத்தியமா என்பதை கூட கல்வி அலுவலர்கள் யோசிப்பதில்லை. இவ்வாறு கூறினர்.
