தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூல்களை படிப்போர் பண்டிதர் ஆகலாம்

நூல்களை படிப்போர் பண்டிதர் ஆகலாம்

நூல்களை படிப்போர் பண்டிதர் ஆகலாம்


UPDATED : நவ 26, 2023 12:00 AM

ADDED : நவ 26, 2023 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2023 12:00 AM ADDED : நவ 26, 2023 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடவூர்:
நுாலகத்திற்கு சென்று நூல்களை படிக்கும் போது நீங்கள் பண்டிதர் ஆகலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் மாவட்ட கரூர் மைய நுாலகத்தில் தேசிய நூலக வார நிறைவு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமைவகித்து பேசியதாவது:
நுாலகத்திற்கு சென்று நூல்களை படிக்கும் போது பல்வேறு தகவல்கள் செய்திகளை படித்து அறியும் பொழுது, நீங்களும் பண்டிதர் ஆகலாம். நான் முதன்முதலாக நூலகத்திற்கு சென்று செய்திகளின் முக்கிய குறிப்புகளை எடுக்கும் போது பெற்ற தாயின் மடியில் இருந்த அனுபவத்தை பெற்றதாக உணர்ந்தேன்.மனித வளத்தை மேம்படுத்துவதில் முக்கியமானது நமக்கு நுாலகம் தான். பள்ளி மாணவச் செல்வங்கள் பள்ளி பாடங்கள் படிப்பதுடன், விடுமுறை நாட்களில் நுாலகத்திற்கு சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நுாலகத்திற்கு ஆரம்பத்தில் சென்று நூல்களைப் படிக்கும் பொழுது ஒன்று புரியாது. ஆனால், நுால்களை படிக்க படிக்க ஆலமரங்களை போல் விழுது விட்டு உங்கள் அறிவு மேம்பட்டு இருக்கும். பள்ளி பருவத்தில் இருந்து நூல்கள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட நுாலகர் சரவணக்குமார், மாவட்ட மைய நுாலகர் சிவகுமார், கரூர் மாவட்ட வாசகர் வட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us