கருணாநிதி சிலையுடன் முத்தமிழ் தேர் காத்திருந்து சோர்வடைந்த மாணவர்கள்
கருணாநிதி சிலையுடன் முத்தமிழ் தேர் காத்திருந்து சோர்வடைந்த மாணவர்கள்
UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:20 AM
தஞ்சாவூர்:
கருணாநிதி சிலையுடன் வந்த முத்தமிழ் தேரை வரவேற்க அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவர்கள், வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சோர்வடைந்தனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பன்முக தன்மையை விளக்கும் வகையில், முத்தமிழ் தேர் உருவாக்கப்பட்டு, ஊர்வலமாக சென்று வருகிறது. நேற்று காலை, தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அந்த வாகனத்தை பொதுமக்கள், மாணவ - மாணவியர், மகளிர் சுய உதவி குழுவினர், தி.மு.க.,வினர் வரவேற்றனர்.இதற்காக தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். தேர் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாக மாணவர்களை அழைத்து வந்து வெயிலில் நிற்க வைத்தனர். இதனால், பல மாணவர்கள் சோர்வடைந்து, சாலை மீடியன்களில் அமர்ந்தனர்.தேரில் இருந்த கருணாநிதி சிலையுடன், கட்சியினர் போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவு செய்து, கட்சி தலைமையிடம் பெயரெடுக்க, மாணவர்களை தள்ளி விட்டு, வாகனத்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் சிலர் கீழே விழுந்தனர். கட்சியினர் முண்டியடித்து ஏறியதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை பார்த்த பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
