UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:31 AM
திருப்பூர்:
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கவுன்சிலிங், 27ம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் நெருங்கி வருவதால், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, கவுன்சிலிங் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. உபரியாக இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, அந்தந்த மாவட்டத்துக்குள் உள்ள காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட உள்ளனர்.இதற்காக, மாவட்ட கல்வித்துறை மூலம் ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு உபரி, பற்றாக்குறை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் செய்வதற்கான கவுன்சிலிங் கடந்த, 20ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடப்பதாக இருந்தது.நிர்வாக காரணங்களால், நடைபெறவில்லை. இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், 27ம் தேதி நடக்குமென மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
