ஓட்டுனருடன் நடத்துனர் பணி நாளை தேர்வு முடிவு வெளியீடு
ஓட்டுனருடன் நடத்துனர் பணி நாளை தேர்வு முடிவு வெளியீடு
UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:38 AM
சென்னை:
போக்குவரத்து கழக ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவு நாளை வெளியாகிறது.இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனருடன் நடத்துனர் பணிக்கான காலி பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக 11,117 பேர் விண்ணப்பித்தனர். கடந்த 19ம் தேதி நடந்த எழுத்து தேர்வில் 9352 பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வுக்குரிய விடைக்குறிப்பு அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும்.எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உபயோகித்து சரிபார்த்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வு மதிப்பெண் வெளியீட்டிற்கு பின் சான்றிதழ் சரிபார்ப்பு ஓட்டுனர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி வயது ஜாதி ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே ஓட்டுனர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
