UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:42 AM
புதுடில்லி:
டில்லியில் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில், ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள், பார்வையாளர்களைக் கவர்ந்தது.புதுடில்லி பிரகதி மைதானத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 12ம் எண் அரங்கில், ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. டில்லியில் தற்போது நிலவும் காற்று மாசுக்கு எதிராக செயல்படும் வகையில், பேஸ்வாஷ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.அதேபோல பப்பாளி, முல்தானி மட்டி, கடியா உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட சோப்புகள் மற்றும் ஆயுர்வேத பற்பசை ஆகியவையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆயுர்வேத அடிப்படையிலான புதிய வகை அழகுசாதனப் பொருட்கள் இரட்டை நன்மைகளைக் கொண்டுள்ளன.இவை ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுத்தாமல் உடல் அழகை மேம்படுத்துகின்றன. மேலும், இவை இயற்கையான துணைப் பொருட்களாக செயல்படுவதால் அவற்றைப் பயன்படுத்துவோருக்கு எந்த பக்க விளைவும் ஏற்படுவதில்லை. அதேபோல தோல் நோய்களை குணப்படுத்துகிறது.
