UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:47 AM
மயிலாடும்பாறை:
ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் உழைத்தாலும், அவர்களுக்கான மதிப்பீடு, அங்கீகாரம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் தான் கிடைக்கும். தேர்வில் பின்தங்கிய மாவட்டங்கள் முதல், 15 இடங்களுக்குள் வந்தால் தான், அது பெரிய செய்தி. அதற்கான பணிகளை செய்ய ஆசிரியர்கள் உறுதியேற்க வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில், 4,200 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்கள், வாள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தமிழர்களின் பண்டைய பாரம்பரியம், நாகரிகத்தை எடுத்து கூற மாவட்டத்தில் நிறைய அம்சங்கள் உள்ளன. ஆனால், பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கில புத்தகத்தை பார்த்து சரளமாக படிக்க தயங்குகின்றனர். இது, எனக்கு வருத்தம் அளிக்கிறது.ஆசிரியர்களால் மட்டுமே, அதை சரி செய்ய முடியும். மாவட்ட தேர்ச்சி விகிதத்தை முன்னேற்றினால் உங்களுக்கு முதல்வரிடம் நேரில் பாராட்டு கிடைக்கும். இந்தியாவிலேயே, தமிழத்தில் மட்டும் தான் பள்ளிக்கல்வி துறைக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
